செய்திகள்

நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களுக்கு விடுமுறை

நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களுக்கு கடந்த 06 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைகள் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மாவட்ட நீதிமன்றம்,நீதவான் நீதிமன்றம்,சிறுவர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.