செய்திகள்

நாடெங்கிலும் 20ற்கும் மேற்பட்ட மே தின ஊர்வலங்கள்

சர்வதேச உழைப்பாளர் தினமான இன்று அரசியல் கட்சிகள் , தொழிற்சங்கங்கள் நாடு பூராகவும் 20ற்கும் மேற்பட்ட பிரதான கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தவுள்ளன.
இவற்றில் கொழும்;பில் 11ற்கும்; மேற்பட்ட பிரதான கூட்டங்களும் 12 பேரணிகளும் நடத்தப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் , பேரணிகள் தாமரை தடாகம் மற்றும் டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தை பகுதியிலிருந்து இடம்பெறும்.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான பேரணிகள் கிரேன்ட்பாஸ் மற்றும் மாளிகாவத்தை பகுதிகளிலிருந்து இடம்பெறும் ஜே.பி.பியின் கூட்டம் கிருளப்பனை பீ.ஆர்.சி மைதானத்தில்  அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் இதற்கான பேரணி தெஹிவளை பகுதியிலிருந்து இடம்பெறும்.
இதேவேளை ஜனநாயக கட்சியின் கூட்டம் நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் அந்த கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நடைபெறும். பேரணி ராஜகிரிய பகுதியிலிருந்து இடம்பெறும். தினேஸ்குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல்வீரவன்ச ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்பினர் நடத்தும் கூட்டம் கிருளப்பனை அத்துலத்முதலி மைதானத்தில் நடைபெறும்.
இதேவேளை இலங்கை தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் தலவாக்கலை நகரில் நடத்த திட்டமிட்டுள்ளதுடன் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தோட்டங்கள் ரீதியாக கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளன.