செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

அரசாங்கத்தினால் கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்துக்கு ஏற்பட்ட நட்டம் காராணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டப்பாடு ஏற்படலாமென தெரிவிக்கப்படகின்றது.

புதிதாக எரிபொருளை இக்குமதி செய்ய முடியாத நிலைமை காராணமாகவே இந்த தட்டுப்பாடு நிலவலாம் என தெரிவிக்கப்படகின்றது. தற்போது கூட்டுத்தாபனத்திடம் கையிருப்பில் சிலநாட்களுக்கான எரிபொருள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நட்டத்தை ஈடு செய்யும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள போதும் அதற்கு அரசாங்கம் இணங்காத நிலையிலேயே இந்த நிலைமையேற்ப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென எரிசக்தி மற்றும்; மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்ததக்கது.