செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் பெருமளவு இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர்

வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர்.இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.குறித்த இளையோர் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்காகவும் விசா பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடவும் கொன்சியூலர் அலுவலகம் முன் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.இதேவேளை, நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)