செய்திகள்

நாட்டில் தீவிரமாக பரவும் கண் நோய் : வைத்தியரின் அலோசனைகளை பின்பற்றவும்

நாட்டில் ஒரு வகை கண் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் அவ்வாறு கண்நோய் தொற்றுக்கு இலக்காணவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையை பின்பற்றுமாறு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் சனத் த சில்வா தெரிவித்துள்ளார்.

கண் சிவத்தல் , கண்ணீர் வடிதல் , கண் அறிப்பு ,சூரிய வெளிச்சத்தை பார்க்க முடியாவை ஆகியனவே இந்த கண் நோய்க்கான அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிகுறிகள் இருப்போர் உடனடியாக வைத்தியரை நாடி அதற்குறிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன்  அந்த நோய் மற்றவர்களுக்கும் பரவாத வகையில் வைத்தியர்களின் ஆலோசனையை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக இந்த நோய் அறிகுறியுள்ளவர்கள் பொது இடங்கள் மற்றும் பஸ் உட்பட பொதுப்பயன வாகனங்களில் பயணிப்பதனை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் அப்போது மற்றவருக்கும் அது பரவுவதனை தவிர்க்க முடியுமெனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.