செய்திகள்

நாட்டில் நிலவும் உஷ்ணமான கால நிலையால் பாடசாலை விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டது

நாடு பூராகவும் நிலவும் கடும் வெப்பமான கால நிலை காரணமாக பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது வலய மட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் உஷ்ணமான கால நிலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் இதனால் விளையாட்டுப் போட்டிகளை இப்போது நடத்தாது. அடுத்த தவணையில் நடத்துமாறு கல்வி அமைச்சு சகல வலய பணிமனைகளுக்கும் அறிவித்துள்ளது.
இதேவேளை வெப்பமான கால நிலை நிலவும்  காலத்தில் மைதானங்கள் உள்ளிட்ட திறந்த இடங்களில் நிற்பதனையும் மற்றும் வெயிலில் திரிவதனையும் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
n10