செய்திகள்

நாட்டில் பிறப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் : பொது பல சேனா

நாட்டில் பிறப்பு கட்டுப்பாட்டு சட்டமொன்றை கொண்டுவரவேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. அத்துடன்  சகலறுக்கும் திருமண சட்டம் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் பிறப்புக் கட்டுபாட்டு சட்டமொன்றை கொண்டுவர வேண்டும். சிங்களம் , தமிழ் , முஸ்லிம் யாராக இருப்பினும் 3 பிள்ளைகளே இருக்க வேண்டுமென்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும். அத்துடன்  சகலறுக்கும் திருமண சட்டம் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு திருமன சட்டம் இருக்க கூடாது . இதேவேளை மதங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் பிரதேசங்கள் நீக்கப்பட வேண்டும். இது மட்டுமன்றி பொது இடங்களில் முகத்தை மறைத்த உடைகள்அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும்.
இந்த விடயங்கள் எமது கட்சியின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.