செய்திகள்

நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்க நாம் அதிகாரத்திற்கு வரவில்லை பாதுகாக்க வந்தவர்கள்

நாட்டின்  பாதுகாப்புக்கோ அல்லது இறைமைக்கோ பாதிப்பாக அமையும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாதிடாது எனவும் பொய் கதைகளை நம்பி யாரும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு நேற்று இரவு வழங்கிய விசேட நேர்காணல் நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை என மிகத்தெளிவாக கூறவிரும்புகிறேன்.
ஆகையால் எவரும் எந்தவொரு பீதியும் கொள்ளத்தேவையில்லை. ஒருபோதும் நாம் இந்த நாட்டை எவருக்கும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்பதையும் அதனை செய்ய நாம் ஆட்சிக்கு வரவில்லை என்பதனையும் இந்த நாட்டின் நன்மைக்காக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் நாட்டை முன்னேற்றுவதற்காகவுமே நாம் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
இதேநேரம், எமது அரசாங்கம் நிலையற்ற தன்மையில் இருக்கின்றது என்ற அவதூறை முன்வைப்பவர்கள் இந்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகத்தையே இழைக்கின்றனர் என்றும் எமது அரசு ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளது என்ற கருத்தை பரப்புவதன் மூலம் அரசுக்கு சாதகமான சகல துறைகளிலும் கிடைத்துவரும் ஒத்துழைப்பை இல்லாதொழிக்கச்செய்வதே அவர்களது நோக்கமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வiயில நானும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கும் எம்முடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுடன் நாம் மிக சிறந்த புரிந்துணர்வுடனேயே உள்ளோம். ஆகையால் அவர்கள் கூறிவருவதைப் போல் எவ்வித சூழ்ச்சிகளும் இல்லை என்பதை மிகத் தெளிவாக கூறவேண்டும்.
n10