செய்திகள்

நாட்டை முன் கொண்டு செல்ல மஹிந்தவை பிரதமராக்க வேண்டும்: கோதாபய ராஜபக்ஷ

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்றால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செய்றபடவேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இதற்காக உடனடியாக தேர்தலுக்கு சென்று மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
” New Indian Express ” செய்திப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே கோதாபய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றதா என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியில் முன்னனெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் இவ்வாறாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இதனால் மைத்திரியும் மஹிந்தவும் இணைந்து நாட்;டை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் இதுவே மக்களின் கோரிக்கையாக இருப்பதாகவும். ஆகவே உடனடியாக தேர்தலுக்கு சென்று மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமெனவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.