செய்திகள்

நானுஓயா தோட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கி வைப்பு!

நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் நேற்று (18.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்யேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், இ.தொ.காவின் பிரதி தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ராஜதுரை, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேல், உப தலைவர்களான பிலிப், சச்சிதானந்தன், கந்தசாமி நாயுடு, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி, உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான வேலு யோகராஜ், ராஜமணி பிரசாத், கதிர்செல்வன், தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், பிரதி தேசிய அமைப்பாளர் சசிகுமார், மாநில இயக்குநர்கள் மற்றும் பிரதிநிதிகள், மாவட்ட தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், எனது இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, இளைஞர் அணி செயலாளர் மற்றும் அமைப்பாளர்கள், மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

-(3)