செய்திகள்

நான்காவது டெஸ்டில்ஜோன்சன் விளையாடுவது நிச்சயமில்லை

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட்போட்டியில் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஜோன்சன் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகின்றன.
போட்டி நடைபெறவுள்ள சிட்னிக்கு ஜோன்சன் பயணமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிட்னியில் விளையாடும் பட்சத்தில் குறுகிய நேரங்களுக்கே பந்துவீசுவது குறித்து அணித்தலைமையுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அவர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது பந்துவீச்சு வேகமும் இந்த தொடரில் குறைந்தே காணப்பட்டது.