செய்திகள்

நான் இனவாதியல்ல , சிங்கள பௌத்தன் : மஹிந்த

நான் இனவாதியல்ல அதேவேளை சிங்கள பௌத்தன் என்று கூற பின்வாங்கப்ப போவதுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டி தலதாமாளிகையில்  நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கல்துக்கொண்டிருந்த வேளையிலேயே  மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கின்றது. அன்று மக்கள் வெடிகுண்டு பயத்திலேயே இருந்தனர். தலதா மாளிகை மீதான குண்டு தாக்குதலையும் மறக்க முடியாது. இன்று சிலருக்கே அது ஞாபகம் இருக்கின்றது. இதேவேளை நான் இனவாதியல்ல , சிங்கள பௌத்தன் இதனை கூற நான் பின்வாங்கப் போவதில்லை.