செய்திகள்

நான் காணாமல் போகவில்லை உக்கிரேனில் தங்கியிருக்கின்றேன் : தேடப்படும் உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

தான் காணாமல் போகவில்லையெனவும் உக்கிரேனில் கீவ் நகரத்தில் வசித்து வருவதாகவும் ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
உக்கிரேன் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் எங்கு இருக்கின்றார் என்பது தொடர்பான  தகவல்கள் எதுவும் வெளியாகாது இருந்ததுடன் அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்றைய தினம் அறிக்கையொன்றை விடுத்து தான் காணாமல் போகவில்லை உக்கிரேனில் கீவ் நகரில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையெனவும் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.