செய்திகள்

நான் சிறப்பாக சேவையாற்றிய அரச அதிகாரி : கோதாபாய ராஜபக்ஷ

தான் சிறப்பாக சேவையாற்றிய அரச அதிகாரியெனவும் தனக்காக போராடுபவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய போது தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் சிறப்பாக சேவையாற்றிய அரச அதிகாரி தனக்கு எதிராக இப்படி செய்தால் மற்றைய அதிகாரிகள் ஒழுங்காக வேவையாற்ற மாட்டார்கள். தனக்காக போராட்டம் நடத்த வந்துள்ளவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.