செய்திகள்

நான் பதவி விலகவுமில்லை அலுவலகத்தை காலி செய்யவுமில்லை: மொஹான் பீரிஸ்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு அப்போது அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மனப்பூர்வமாக ஆதரித்திருந்ததாக தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், தான் தனது பதவியை ராஜினாமா செய்யவோ அன்றி தனது பிரதம நீதியரசர் அலுவலகத்தை காலிசெய்யவோ இல்லை என்றும்,வெளியக சக்திகளினால் நீதிக்குப் புறம்பாக அரசியலமைப்புக்கு முரணாக சங்கிலித்தொடராக இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்து இருப்பதாக உணர்வதாக கூறியிருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேய இன்வாறு தெரிவித்திருக்கும் மொஹான் பீரிஸ் சில சந்தர்ப்பங்களில் பலமானது உரிமையை முந்திச் செல்கிறது என்றும் உதவியற்றவர்கள் அநீதிகளுக்கு இரையாக வேண்டி இருக்கிறது என்றும் குறிப்பிட்டுளார்.