செய்திகள்

நான் பிழையற்றவன் என்பது எனக்கு தெரியும்

நான் பிழையற்றவன் என்பது எனக்கு தெரியும் என பாராளுமன்ற உறுப்பின்னர் துமிந்த சில்வா இன்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகரான பாரத லக்ஸ்மன் கொலைவழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த துமிந்த சில்வா ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நீதியையும் நீதிமன்றையும் தான் நம்புவதாகவும், வழக்கு விசாரணை நடைபெறுவதால் தற்போது எதுபும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.