செய்திகள்

நாமலிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மூத்தமகனுமான நாமல் ராஜபக்சவை இம்மாதம் 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

இப்போது என்னையும் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஜூன் 12 ஆம் திகதி வருமாறு அழைத்துள்ளது.

ஆனால் எந்த குற்றத்துக்காக விசாரணை என்று குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.