செய்திகள்

நாமல் இன்று இரகசிய பொலிஸ் பிரிவிற்கு செல்வார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ விசாரணைக்காக இன்று கொழும்பிலுள்ள இரகசிய பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இன்று  காலை 9 மணியளவில் அவர் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் அகுனுபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கலந்துக் கொண்ட கூட்டத்துக்குள் கைத்துப்பாக்கியுடன் நாமல் ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவர் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.