செய்திகள்

நாமல் உட்பட மஹிந்த தரப்பினர் மைத்திரி தலைமையில் போட்டியிட விண்ணப்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்காக நாமல் ராஜபக்‌ஷ உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு எம்.பிக்கள் அனைவரும் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து தற்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அவர்களும் அதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவே வேட்பாளர்களை தெரிவு செய்யும்.
மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் வேறாக போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகின்ற போதும் அவர் தரப்பு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்இ என்பது குறிப்பிடத்தக்கது.