செய்திகள்

நாரஹென்பிட்டவில் கண்டெடுக்கப்பட்ட விமானம் விமானப்படை வசம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோசிதவின் விமானம் ஒன்று கடந்த மாதம் நாரஹென்பிட்ட வில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய இந்த விமானத்தை நாளை அல்லது நாளை மறுதினம் விமானப்படைக்கு சொந்தமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தை அரசசொத்தாக்குவாத ற்கு ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜெவர்தனவே காரணம் என தெரியவருகிறது.