செய்திகள்

நாரஹேன்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய விமானம் விமானப் படை அருங்காட்சியகத்தில்

கடந்த ஜனவரி 3 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சியசாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக விமானம் இன்று இலங்கை விமானப் படையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கலாநிதி ரே.விஜேவர்தனவினால் இலங்கையில் முதன் முறையாகத் தயாரிக்கப்பட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விமானம் திருத்தப்பட்ட பின்னர் விமானப் படை அருங்காட்சியகத்தில் இன்று வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரே.விஜேவர்தனவின் குடும்ப உறுப்பினர்கள், விமானப் படைத் தளபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.