செய்திகள்

நாளாந்த வருமானத்தை இழந்தோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு : 20ஆம் திகதி முதல் விநியோகம்

கொரொனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி மேசன் பாஸ் , மர தளபாடம் செய்பவர்கள் , மின்சார தொழில்நுட்ப தொழிலாளர்கள் உள்ளிட்ட பவ்வேறு பிரிவுகளை சேர்ந்தோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்த கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களை கிராமிய குழுக்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுக்களின் அதிகாரிகள் மூலம் குறித்த தொழிற்துறையில் ஈடுபடுவோருக்கு அந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)