நாளைமுதல் 6ம் திகதி வரை புகைத்தல் ஒழிப்பு வாரமாக பிரகடனம்
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துக்கு சமாந்திரமாக நாட்டில் புகைத்தல் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி நாளை 31ம் திகதி முத் எதிர்வரும் 6ம் திகதி வரை புகைத்தல் ஒழிப்பு வாரமாக பிரகடப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை இணைத்து மாகாண ரீதியில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் புகைத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விசேட சட்ட திட்டங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.