செய்திகள்

நாளைய போட்டியில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்: ரோகித் சர்மா

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் நாளை நடக்கும் இரண்டாது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று தொடக்க வீரர் ரோகிச் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போதுள்ள நிலையில் வங்காள தேசத்தை விட நம்முடைய அணி சிறந்தது. நம்முடைய பார்வயைில் அடுத்த போட்டி குறித்து நாம் திட்டம் தீட்டுவது முக்கியமானது. அவர்கள் இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், நாம் இழப்பதற்கு நிறைய உள்ளது. இதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் எதிர்பார்த்ததை விட அவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இருந்தாலும் இது குறித்து எந்த சாக்குபோக்கும் சொல்லக்கூடாது. தொழில் முறையாக அவர்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். நாளைய போட்டிக்காக நாங்கள் அதிக அளவு தயார் நிலையில் சொல்லுவோம் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்’’ என்றா