செய்திகள்

நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் பிற்பகல் முதல் மீண்டும் ஊரடங்கு அமுலாகும்

நாளை (01) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதன் பின்னர் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரவுள்ளது. -(3)