செய்திகள்

நாளை பல பிரதேசங்களில் கடும் உஷ்ணம் நிலவும்!

மேல் , வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மற்றும் மன்னார் , வவுனியா , மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் மக்கள் இந்த காலப்பகுதியில் அதிமாக நீரை பருக வேண்டுமெனவும் குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)