செய்திகள்

நாவாந்துறையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: இளைஞர் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இளைஞர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு பொலிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாவாந்துறைப் பகுதியில் இரு பிரிவினரிடையே உருவான மோதலைத் தடுக்கும் நோக்கத்துடனேயே படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.