Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகளிர் தினத்தில் தன்னம்பிக்கையால் உயர்ந்த 84 வயது அரசு அம்மாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு

மகளிர் தினத்தில் தன்னம்பிக்கையால் உயர்ந்த 84 வயது அரசு அம்மாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 இல், தன்னம்பிக்கையால் உயர்ந்த 84 வயதான அரசு அம்மாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் 1988 ஆம் ஆண்டு ஒரு சிறிய கடையை அமைத்து இன்று அந்த கடை மூலம் பேசப்படும் ஒருவராக திகழும் மூத்த பிரஜையான திருநாவுக்கரசு சரஸ்வதி (அரசு அக்கா- வயது 84) என்பருக்கே இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டு தனது கணவனை இழந்த போதும் தன்னம்பிக்கையுடன் உழைத்து மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து காட்டி இன்று மற்றவர் பாராட்டும் அளவுக்கு தனது முயற்சியால் உயர்ந்து நிற்கின்றார் இந்த சரஸ்வதி அம்மா. வாழும் போதே சாதித்தவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவுள்ள வவுனியாவின் மூத்த பிரஜையான சரஸ்வதி அம்மா கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு பிரபாகரசர்மா, வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், கிராம அலுவலர் எஸ்.செல்வராசா, சமூக ஆர்வலர் கௌதமன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திக் கௌரவித்தனர்.

IMG_0188.jpga

v1

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *