செய்திகள்

நிதிமோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல மஹிந்த திட்டம்

பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரத்தில் தனது சட்டத்தரணியூடாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தரப்பு சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைப் பிரிவின் செயற்பாடுகள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இதனால் இதற்கு தடைவிதிக்குமாறும் கோரியே அவர் குறித்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தன்னை கைது செய்யாத வகையில் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் அதன்படி நீதிமன்றம் அவரின் கைதுக்கு தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.