செய்திகள்

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு ஆஜரான சஷி வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்ச, கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சுகயீனம் காரணமாக அவர், அன்று ஆஜராகவில்லை. இந்நிலையிலேயே இன்று வியாழக்கிழமை ஆஜராகியுள்ளார்.

காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.