செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வரும் நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்;துள்ளார்.
இதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளாரர்.