செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பசில் ராஜபக்சவை நாட்டுக்கு திருப்பி அழைக்க முடிவு

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாரியளவு நிதி மோசடி தொடர்பில் பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அது தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு அழைத்துவர வேண்டியுள்ளதென அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றதை அடுத்து பசில் ராஜபக்சவை தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு பாராளுமன்றில் மூன்று மாத விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.