செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவின் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு : விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாம்

விசேட நிதி மோசடி விசாரணை பிரிவின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு மேலாக தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணம் செலுத்தாத காரணத்தினாலே இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விசாரணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் புதிதாக விசாரணைகள் நடத்தப்படுவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி மோசடி விசாரணை பிரிவு  பிரிவு தொடர்பாக நீதிமன்றில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இவ்வாறு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.