செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவின் செயற்பாடுகள் சுயாதீனமானது எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது : அரசாங்கம்

நிதி மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது எனவும் நிதி மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் நிறுவனங்கள் சுயாதீனமாகவே செயற்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசாரணையென்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சியினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தினால் நேற்று விடுக்கப்பட்டிருந்த அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நாட்டில் நிதி மோசடி செயற்பாடுகள் அதிகரித்து காணப்பட்ட நிலைமையிலேயே பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸ் கட்டளை சட்டத்தின் 55வது உறுப்புறுமைக்கமைய அமைச்சரவையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரின் பூரண கண்கானிப்பின் கீழ் செயற்படும் வகையில் குறித்த பிரிவு அiமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்ததாக இது போன்று 64 பிரிவுகள் தற்போது இயங்குவதுடன் அவை பொலிஸ் பொலிஸ் திணைக்களத் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டவையல்ல அதன்பின்னர் வெவ்வேறான காலப்பகுதியிலேயே அவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிதி மோசடி விசாரணை பிரிவும் அதனை போன்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்துக்கு உரிய அதிகாரத்துக்கு புறம்பாக எந்தவொரு யாப்பு ரீதியான அதிகாரமும் அந்த பிரிவுக்கு வழங்கப்படவில்லை.

இதேவேளை கடந்த ஜனவரி 21ம் திகதி அமைச்சரவை கூடிய போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஊழல் ஒழிப்பு குழுவாக அழைக்கப்படும் அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சிபாரிசுக்கு இணங்க அமைச்சரவையின் அனுமதியுடன் இதற்கென வேறான செயலகமொன்றும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தெளிவுபடுத்த வேண்டிய விடயமொன்று உள்ளது. அதாவது பொலிஸ் நிதி மோசடி விசரணை பிரிவு மற்றும் அந்த செயலகம் ஒருபோதும் அமைச்சரவையினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆனால் சட்டம் சரியாக செயற்படுத்தப்படுவதனை உறுதிசெய்யும் வகையில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மாத்திரமன்றி சட்டத்தை செயற்படுத்தும் மற்றைய பிரிவகளால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து வாராந்தம் ஆய்வு செய்யப்படும்.

எவ்வாறாயினும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் மற்றைய பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமானதென்பதனை அரசாங்கம் உறுதிப்படுத்துவதுடன் சட்டத்தை செயற்படுத்தும் விடயங்கள் தொடர்பாக எந்தவொரு அரசியல் தலையீடும் கிடையாது எனபதனை தெரிவித்துக்கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.