செய்திகள்

நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கின்றது பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 1200ற்கும் அதிகமானவாகள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை தலைநகர் காத்மண்டு முழுவதும் கட்டிட இடிபாடாக காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

n6

தீடிரென மேசைகள் ஆடத்தொடங்கின சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் விழத்தொடங்கின என பூகம்பம் ஏற்பட்ட வேளை காத்மண்டுவில் தேநீர் விடுதியொன்றில் இருந்த இந்திய உல்லாசப்பயணி தேவயானி பன்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

நான் அலறிக்கொண்டு வெளியே ஓடினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் ஆகக்குறைந்தது 300 பேராவதுபலியாகியுள்ளனர்,நாங்கள் தற்போது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி;க்கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமயமலை பகுதியில் பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்.மலையேறுவதற்காக சென்றவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இவர்களின் உடல்களை இந்திய இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இமயமலைப்பகுதியில் எத்தனைபேர்கொல்லப்பட்டார்கள் என்பதை மதிப்பிடுவது கடினமாக இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மலையின் அனைத்து பகுதிகளிலும் இருக்கலாம் சிலர் மிக உயரத்திற்கு கூட சென்றிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

n7
இமயமலைக்கு செல்வதற்காக சுமார் 300.000 உல்லசாப்பயணிகள் நேபாளத்திற்கு வந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூகம்பம் காரணமாக காத்மண்டுவின் மிகப்பழமையான தரஹராகோபுரமும் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.100 அடி உயரமான இந்த கோபுரம் 1832 ம் ஆண்டு நேபாள மகராணிக்காக கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 வருடங்களாகவே மக்களுக்காக திறந்துவிடப்பட்ட இந்த கோபுரத்தில் பூகம்பம் ஏற்பட்ட வேளை பெருமளவு பொதுமக்கள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கோபுரம் முற்றாக சிதைந்துள்ள நிலையில் அதன் கட்டிட இடிபாடுகளுக்குள் 200 உடல்கள் சிக்குண்டிருக்கலாம் டின அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காத்மண்டுவின் முக்கிய மருத்துவமனைக்கு பெருமளவு அம்புலன்ஸ்கள் வந்தவண்ணமுள்ளன. நகரின் இடிபாடுகளுக்குள் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தவர்களை தேடிவருகின்றனர். பல இந்து ஆலயங்கள் முற்றாக தரைமட்டடதகியுள்ளன.

முற்றாக தரைமட்டமாகியுள்ள பௌத்தஆலயமொன்றிற்குள் மூன்று பௌத்த துறவிகளின் உடல்களை காண முடிவதாக இந்திய உல்லசாப்பயணியொருவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் உடல்களை வெளியே எடுப்பதற்கு முயல்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.