Search
Tuesday 22 August 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சமகள இணையத்தளத்தில் வெளியிடப்படும் எழுத்து, புகைப்படம், காணொளி மற்றும் காணொலிவடிவிலான சகல படைப்புக்களும் பதிப்புரிமையினால் பாதுகாக்கப்பட்டவை. ஆசிரியரிடம் இருந்து எழுத்து மூலமான முன் அனுமதி இன்றி எந்த வடிவிலான ஒரு சமகளவெளியீட்டினையும் முழுமையாகவோ அன்றி பகுதியாக இணையம் மூலமோ, இலத்திரனியல் மூலமோஅன்றி அச்சு மூலமோ எவரும் மறு பிரசுரம் செய்ய முடியாது. உரிய அனுமதி இன்றி எவரேனும் சமகள படைப்புக்களை மறுபிரசுரம் செய்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பர கொள்கை

வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபாரங்கள் மற்றும் சேவைகளை சமகள இணையத்தளத்தில் விளம்பரம்செய்து தமது வியாபாரத்தினை மேம்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் தமது விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புக்களை பிரசுரம் செய்து பயன்பெற முடியும்.

எமது ஆசிரியர் பீட கொள்கை மற்றும் ஒழுக்கக் கோவைக்கு முரணான அல்லது எவரையும் அவதூறுசெய்யும் வகையிலோ வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையிலோ அமைந்த அல்லது இழிவான மற்றும் சட்டவிரோதமான விளம்பரங்களை நிராகரிக்கும் உரிமை சமகளத்துக்கு இருக்கிறது.

விளம்பரதாரர்களினால் எமக்கு தரப்படும் விளம்பரங்கள் சரியானவையாகவும், சட்டபூர்வமானவையாகவும் பதிப்புரிமை சிக்கல்கள் எதுவும் இன்றி அமைவதை உறுதிப்படுத்துவது விளம்பரதாரர்களின்பொறுப்பு ஆகும்.

விளம்பரதாரர்கள் சார்பாக சமகள இணையத்தளத்தினால் வடிவமைக்கப்படும் விளம்பரங்களின் பதிப்புரிமை சமகளத்திற்கே உரித்தானது. இந்த விளம்பரங்களை வேறு எங்கேனும் மறு பிரசுரம் செய்வதானால் எம்மிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

மேலே விபரிக்கப்பட்ட நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களை தாமே தயாரித்து எமக்கு வழங்குவதையே விரும்புகிறோம்.

பற்றுச்சீட்டு மற்றும் பணம் செலுத்துதல்

பணம் செலுத்துவதற்கான தவணை நீடிப்பானது சமகளம் மற்றும் விளம்பரதாரர் இடையே எழுத்து மூலமாக இணங்கப்பட்டிருந்தால் அன்றி, எந்த ஒரு கட்டனமும் பற்றுச்சீட்டில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட வேண்டும்.

விளம்பரதாரர்களும் அவர்களது வாடிக்கையாளர்களும்

எம்மால் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பில் விளம்பரதாரர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்துக்கும் சமகளத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தகவல் பாதுகாப்பு

விளம்பரதாரர்களினால் வழங்கப்படும் சகல தகவல்களும் பாதுகாப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்பதுடன் அவை எந்த சந்தர்ப்பத்திலும் மூன்றாவது தரப்புக்கு (சட்டம் அல்லது ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைவாக வேண்டப்பட்டால் அன்றி) பகிரப்படமாட்டாது.

நியதிகளிலும் நிபந்தனைகளிலும் மாற்றம் செய்தல்

மேலே விபரிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் விளம்பரதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு அறிவிக்காமல் மாற்றம் செய்யும் உரிமையினை சமகளம் கொண்டிருக்கிறது.