செய்திகள்

நியூசிலந்துக்கெதிராக இலங்கை கடும் சவாலை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையே சனிக்கிழமை ஆரம்பமாகின்ற இரண்டாவது டெஸ்ட்போட்டியில் இலங்கை அணி கடும்சவாலை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது டெஸ்டபோட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது இனிங்சில் அது வெளிப்படுத்திய திறமையான துடுப்பாட்டத்தை அடிப்படையாக வைத்தே இந்த கணிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இரண்டாவது டெஸ்டில் இடதுகைசுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் விளையாடவுள்ளமையும் இலங்கை அணிக்கு மேலதிக பலத்தை அளித்துள்ளது. ஹேரத்தின் பந்துவீச்சில் பல போட்டிகளில் நியுசிலாந்து தடுமாறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் முதலாவது டெஸ்ட்போட்டியில் விளையாடிய நிரோசன் திக்வெல்லவிற்கு பதிலாக தினேஸ் சந்திமல் விiயாடவுள்ளார்.
இதேவேளை இலங்கை அணியை முதலாவது டெஸ்டில் நெருக்கடிக்குள்ளாக்கிய வேகப்பந்து வீச்சாளர் டிம்சவுத்திக்கு தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடுவது நிச்சயமற்றதாக காணப்படுகின்றது.