செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி : பட்லர், ரூட் சதம்

நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் ஜாஸ் பட்லர், ஜோ ரூட் சதம் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து அணி 210 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய்(0), ஹேல்ஸ்(20) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய போதிலும் பின்னர் ஜோ ரூட் (104) மற்றும் கப்டன் மார்கன்(50) ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்லர் 129 ஓட்டங்களையும் ரஷித் 69 ஓட்டங்களையும் எடுத்தனர். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 409 ஓட்டங்கள் எடுத்தது.