செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பெல், பிராட் நீக்கம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 124 ரன்னில் வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் நியூசிலாந்து 199 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இரு அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 9–ந்தேதி நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சீனியா வீரர்களான ஆண்டர்சன், பெல், ஸ்டூவாட் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக இவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆசஷ் டெஸ்ட் தொடர் ஜூலை 8–ந்தேதி தொடங்குகிறது.

இதேபோல முன்னணி பேட்ஸ்மேன்களான கேரிபேலன்ஸ், மொய்ன் அலி ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறிதால் இந்த அதிரடியான மாற்றம் செய்யப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி விவரம்:–

மார்கன் (கேப்டன்), சாம்பில்லிங்ஸ், பட்லர், அலெக்ஸ் ஹால்ஸ், ஸ்டீவன்பின், கிறிஸ் ஜோர்டான், புளுகெட், ஜோரூட், ஜேசன்ராய், ஆதில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், டேவிட் வில்லி, மார்க்வுட்.