செய்திகள்

நிலத்தடி நீரில் கழிவோயில் பிரச்சினை! நீண்டகால குறுங்கால திட்டங்கள் தொடர்பில் தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் அறிக்கை

யாழ்ப்பாணம் வலிகாமம் நிலத்தடியில் ஒயில் மற்றும் கிறீஸ் கலந்தமை சார்பாக கடந்த 5 வருடங்களாக அதனை வெளிக்கொணர்ந்து தீர்வை நோக்கி நகர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், முயற்சிகள் சார்பாக யாருடையாவது மனத்தைப் புண்படுத்தியிருந்தால் எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந்த சபையின் முன் தீர்க்கமான பதிவு ஒன்றினை மேற்கொள்ள விரும்புகின்றோம். அதாவது தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதி நிதிகளாகிய நாம் பிரதேசத்து மக்களால் நீர்பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்களை வெளிக்கொணர்வது மாத்திரமே எமது நோக்கமாகும்.

இப்பிரச்சனை சார்பான அடிப்படை ஆதாரங்கள்

 * 10-10-2008 ஆம் திகதி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் அரச அதிபரிற்கு தெரியப்படுத்தியமை (இணைப்பு -1)

 * 09.08.2012 தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் 5 தனியார் கிணறுகளும் காரைநகர் போன்ற இடங்களுக்கு நீர் எடுக்கின்ற மூலக்கிணறும் ஆய்வு செய்து நீரில் ஒயில், கிறீஸ் கலந்தமை நிருப்பிக்கப்பட்டமை. (இணைப்பு -2)

 * 29-08-2012 ஆம் திகதி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் கூட்டப்பட்ட குடிநீர் சார்பான கூட்ட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் போது மின்சாரசபை வளாகத்தில் உரிய முறையில் எண்ணைக் கழிவுகள் அகற்றப்படாமல் தரையில் தேங்கிநின்றமை அவதானிக்கப்பட்டது. (இணைப்பு -3)

 * 01.11.2012ம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவோயிலால் சூழல் பாதிக்கப்படுவதாக உடுவில் பிரதேச செயலரால் தெரிவிக்கப்பட்டது. (இணைப்பு – 04).

 * கார்த்திகை மாதம் 2013 தொடக்கம் புரட்டாதி மாதம் 2014 காலப்பகுதிவரை மேற்கொள்ள்ப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 109 கிணறுகளில் (73%) ஆனவற்றில் ஒயில், மற்றும் கிறீஸ் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. (இணைப்பு – 05)

 * 31.07.2014 பொது மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் நீரில் ஒயில், கிறீஸ் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. (இணைப்பு – 06).

 * 2014.09.01ம் திகதிய அமைச்சரவையின் பத்திர இலக்கம் 14/1227/513/031;இற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தீர்வு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டது (இணைப்பு – 07)

 * 27.01.2015 ம் திகதி இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில் பெற்றோலியக் கழிவுகள் நீரில் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அதுபற்றிய அறிக்கைகள் வழக்கேட்டில் கோப்பிடப்பட்டுள்ளது (இணைப்பு – 08).

 * 10.02.2015 ம் திகதிய வடக்கு மாகாணசபையின் 24 ஆம் அமர்வில் கௌரவ விவசாய அமைச்சர் 2012 ஆம் ஆண்டு பெற்றோலியக் கழிவுகள் கலந்துள்ளமை தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வெளியிட்ட அறிக்கை மற்றும் அதே கிணறுகளில் 2014 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீரில் பெற்றேலியக் கழிவுகள் கலந்துள்ளமை தொடர்பாக மண்றில் பதிவுசெய்திருந்தார். (இணைப்பு – 09).

இப்பிரச்சனைகளை கையாள்வதற்கு அணுகக்கூடிய வழிமுறைகளாக சாதாரண பொதுமக்களாகிய நாம் கருதுவது. குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும்

 குறுங்கால திட்டம்

1. விஞ்ஞான பூர்வமாக குடிநீர் ஒயில் மற்றும் கிறிஸ் கலந்தமை தொடர்பில் நிரூபிக்கப்பட்ட கிணறுகள் பாதிக்கப்பட்ட வலயங்களாகவும், ஒயில் கலந்திருக்கலாம் என நம்பப்படும் கிணறுகள் சந்தேகிக்கப்படும் வலயங்களாகவும், விஞ்ஞான பூர்வமாக ஒயில் கலக்கப்படவில்லை என அறியப்பட்ட கிணறுகள் பாதுகாப்பான வலயமாகவும் பிரிக்கப்பட வேண்டும்.

2. சந்தேகிக்கப்படும் வலயத்திலுள்ள கிணறுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

3. விஞ்ஞான பூர்வமாக ஒயில் மற்றும் கிறிஸ் கலந்துள்ளமை நிரூபிக்கப்பட்ட கிணறுகள் தொடர்ச்சியான ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டும்.

4. பாதுகாப்பான தரஉறுதிப்பாட்டுடனான நீர் வழங்கலானது பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் வலயங்களிற்கும் தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும். இதன் சீரான பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும்.

5. தூயநீரிற்கான செயலணியின் உப அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் பிரதிநிதிகள், MOH, PHI, G/S போன்றவர்களது பங்குபற்றுதல்களுடன் உருவாக்கப்படல் வேண்டும்.

6. இப்பாரிய அனர்த்தம் ஏற்பட காரணமாயிருந்தவர்களுக்கும் தங்கள் கடமைகளை சரிவர செய்யத் தவறியவர்களுக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 இடைக்கால நீண்டகால திட்டம்

1. மின்சாரசபை வளாகத்தினுள் அகற்றப்பட்ட ஒயில் மற்றும் கிறிஸ் கழிவுகளையும் நிலத்தடி நீரினுள் கலக்கப்பட்ட ஒயில், கிறீஸ் இனை அகற்றுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

2. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கிணற்று நீரினை தூய்மைபடுத்தி, அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வும், பொறிமுறைகளும் உருவாக்கல் வேண்டும்.

குறிப்பு :- ஏற்கனவே காத்திரமான சரியான அணுகு முறைகள் ஏற்படுத்தப்படாது, தாமதிக்கப்பட்டமையால் Permeable reactive barrier (PRB), Permeable Sorptive Barrier (PSB) போன்ற நடைமுறைகள் இப்போது மேற்கொள்ளப்பட முடியாது என்பதை நாம் உணர்கின்றோம்.

3. இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும்.

இவ்விடயம் சார்பாக செய்யக்கூடிய ஆய்வுகள்
1. 10.02.2015 ஆம் திகதிய வடக்குமாகாண சபையின் 24 ஆம் அமர்வில் கௌரவ விவசாய அமைச்சர் தெரிவித்ததற்கு அமைய எண்ணெய் மாசின் மூலம் அது பரவுவும் திசை மற்றும் அளவுகள், மாசை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

2. மின்சாரசபை வளாகத்தில் ஒயில் மற்றும் கிறிஸ் உள்ள இடங்களை கண்டுபிடித்தல்

3. மின்சாரசபை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒயில் கிறீஸை அகற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்தல்

4. கிணற்று நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசினை அகற்றுவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்தல்.

5. குடிநீரில் ஒயில், கிறீஸ் கலக்கப்பட்டமை சார்பான வழிமுறைகளிற்கான காரணங்களை ஆராய்தல்.

6. கால்நடைகள் மற்றும் விவசாயம் தொடர்பில் ஏற்படும் பாதிப்புக்கள்; சார்பாக ஆராய்தல்

7. மனிதனிற்கு குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலங்களில் ஏற்படகூடிய பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்தல்

எமது அறிவிற்கு எட்டிய வகையில் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை முன்நிறுத்தியே ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென நாமும் முனைகின்றோம்.

மேற்குறித்த ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயங்களும் அதன் நிபுணத்துவமும்.

This might be a difficult task and also this type of problem is new to Sri Lanka as suggested by Hon Minister P.Ayangaranesan on 10/02/2015 in the submission at NPC 24th Session

Problems facing in research works and remedial actions

A. Geology and Hydrology is not studied well in Valikamam Area

B. Don’t know the Plume location & Plume physical Characteristic.

C. Don’t know the chemical Characterization of the Contaminant/ Plume.

On the basis of this Research could be design as follows-

Phase 1

A) Study the Valikamam geology and hydrology

Geology

1. Soil Type – To understand the soil type, soil condition & soil properties.

 Soil sample collection & testing.

2. Subsurface Investigation – To understand the types of layers existed beneath the

surface, Depth of bedrock, Water table depth & Aquifer study.

– Use the previously bored borehole data.(Tube well data)

– Literature study about the subsurface.

– Planning & making boreholes if necessary.

– Collection of core samples & Lab test.

– Geophysical survey.

– Resource Person for this purpose –

Geologist / Engineering Geologist, Soil Engineer/ Specialist.

Hydrogeology

1. Water table- To understand the depth, flow direction, slopes of the water table.

– Use the existing studies & data, Literature survey.

– Modelling (using Software).

– Manual measurements can conduct in wells.

2. Soil Properties- To know the Permeability/ Hydraulic Conductivity of the soil.

3. Aquifer study- To understand the Type of aquifer, Storability, Specific yield.

– Pumping test.

– Slug Test

– Hydrological Analysis.

– Resource Person for this purpose

Hydro geologist.

B) Find out the Plume location& Plume physical Characteristic.

1. Plume Location – Depth & Location of the plume.

– Geophysical Survey. (GPR+ERI).

– Modelling & Mapping (ARC GIS- Software).

– Borehole studies can confirm further.

2. Physical Characteristics of Plume.- Continuous/Discontinuous

– Geophysical Survey (GPR).

– Resource Person for this purpose

Geophysicist

C) Analyze the Chemical Characterization of the Contaminant/ Plume.

1. Chemical Composition of the plume.

– Gas Chromatography analysis.

2. Constituents of the plume – Heavy Metals, Toxic/ Hazardous compounds.

– Atomic Absorption Spectroscopy analysis.

3. SPECS of oil and grease

– Resource person for this purpose

Chemical Engineer (Must be familiar with Petroleum Chemistry/ Process).

PHASE 2

From the finding of above three propose the remedial plans

Remediation

1. Find out the most effective & Sustainable Remediation techniques.

– Pumping out the plume by suction pumps.

– Pump & Treat & Re infiltration of Groundwater.

– Permeable Reactive Barriers.

– Permeable sorptive barrier

– Bio – Remediation.

– Invites Institutions to research on to find out the suitable Remediation techniques.

2. Continuous monitoring of Remediation efficiency.

– Continuous Water quality Monitoring.

– Continuous Plume Monitoring.

Resource Person for this purpose –

Geo Environmental / Environmental Engineer, Soil Engineer / Specialist.

PHASE 3

– Treat and supply

– Adjoining with/without filtration

– Flocculation

– Community base supply

Resource Person for this purpose –

Water Specialist / Water Treatment Specialist

இவை சார்பான நடவடிக்கைகளின் போது பொருத்தமான துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்படாது ஆய்வுசெய்வதானது, ஓர் இதய சத்திரசிகிச்சையை, என்பு சார்பான சத்திர சிகிச்சை நிபுணர் செய்வதனைப்போன்றதாகும்.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”
திருக்குறள் -517

“Install Right person in the right place for that right Job, with full freedom, responsibility & Authority.”

Attachments