செய்திகள்

நில நடுக்கத்தை உணர்ந்து இதய துடிப்பு அதிகரித்தது..ஐபிஎல் வீரர்களின் பீதி அனுபவம்!

நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள். இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், இன்று நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை முதல் முறையாக உணர்ந்தேன். புழுக்கமான வானிலையில் இருந்து கொல்கத்தா திடீரென 2 நிமிடங்களுக்கு, குளி்ச்சியாக மாறியதையும் உணர முடிந்தது. உலக வாழ்க்கை மிக குறுகியது. மகிழ்ச்சியோடும், அடுத்தவர்கள் மீது பாசத்தோடும் வாழ்வோமாக. இவ்வாறு ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

மற்றொரு வீரர் குல்திப் யாதவ் கூறுகையில், எனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன். அது ஒரு பயங்கர அனுபவம். என்னால் நில நடுக்கத்தை உணர முடிந்தது என்றுள்ளார். மற்றொரு வீரர் ஜாதவ் உனட்கட் கூறுகையில், தாய்நிலத்தில் அதிர்வை உணர்ந்தேன். அமைதியாகவும், பூமியோடு இசைந்தும் வாழ வேண்டும் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், டெல்லியில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.