செய்திகள்

நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேபாள அரசாங்கம் உதவிகளை வழங்கும் வேகம் மற்றும் விதம் குறித்து அதிருப்தியும் சீற்றமும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பரவலாக அதிகரித்துவரும் அதேவேளை இன்று அந்த மக்கள் நிவாரணங்களை எடுத்துச்சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சங்காசௌவ்க் கிராமத்தை சேர்ந்த மக்கள் தலைநகருக்கு செல்லும் முக்கிய பாதையில் மூன்று மணிநேரமாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Earthquake victims shout anti-government slogans while protesting against the government's lack of aid provided to the victims in Kathmandu
நிவாரணப்பொருட்கள் அடங்கிய வாகனங்களையும் பின்னர் நிவாரணப்பொருடகளுடன் வந்த இராணுவவாகனங்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் இதுவரை எங்களுக்கு நிவாரணம் எதனையும் தரவில்லை,என வீதிமறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தலைநகர் காத்மண்டுவில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளதால் நிவாரணநடவடிக்கைகளை கையாள்வதில் பலவீனங்கள் உள்ளதாக அரசஅமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.