செய்திகள்

நிஷா யாழ்ப்பாணம் செல்லமாட்டார்: கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உவதி வெளிவிவகாரச் செயலாளர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்வாலின் விஜயம் இரண்டு நாட்களுக்கே வரையறுக்கப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணம் செல்வதற்காக அவருக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிஸ்வால் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் உட்பட முக்கிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பலரையும் சந்தித்த அமெரிக்கா உதவி வெளிவிவகாரச் செயலாளர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்திக்கின்றார் அதனையடுத்து அவர் இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் பயணமாவார்.