செய்திகள்

நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்லத் தடை

இலங்கையை விட்டு ஆயுதக்கப்பல் நிறுவனத்தின் தலைவர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயுதங்களுக்குப் பொறுப்பான எவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவருக்கே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காலிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் கப்பல் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே அந்நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு கொழும்பு பிரதானநீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.