செய்திகள்

நீண்டநாளைக்குப் பிறகு விளம்பரத்தில் நடித்த நயன்தாரா

சென்னையைச் சேர்ந்த ஜிஆர்டி நிறுவனம், தனது முதல் சர்வதேச ஷோரூமை 6500 சதுர அடியில் துபாயில் ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி, ஜிஆர்டியின் விளம்பரத் தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோருமூக்கான விளம்பரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவர் நீண்டநாளைக்குப் பிறகு தோன்றும் விளம்பரம் இது. இந்த விளம்பரத்தை விளம்பர உலகின் பிரபல இயக்குநர் பாபு சங்கர் இயக்கியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் நகைக் கடைகளின் விளம்பரத் தூதராக இருப்பது அதிகமாகி வருகிறது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், விக்ரம் பிரபு நாகார்ஜூனா ஆகியோர் கல்யாண் ஜூவல்லர்ஸூக்கும், விஜய் ஜோஸ் ஆலுக்காஸூக்கும் மாதவன் ஜாய் ஆலுக்காஸூக்கும் விளம்பரத் தூதராக உள்ளார்கள். இந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.