செய்திகள்

நீண்ட வரிசையில் காத்து நின்று லீகுவானிற்கு அஞ்சலிசெலுத்தும் மக்கள்

பெருமளவான சிங்கப்பூர் மக்கள் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் தங்கள் தேசத்தின் தந்தை லீ குவான் யூவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக சிங்கப்பூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்கிழை நள்ளிரவு முதல் ஏழு கிலோமீற்றர் நீளவரிசையில் மக்கள் அஞ்சலிசெலுத்துவதற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

_81884233_81884127
நாங்கள் களைத்துப்போய்விட்டோம் எனினும் லீயிற்கு இறுதிமரியாதை செலுத்தியது குறித்து நாங்கள் மகிழ்சியடைந்துள்ளோம், அந்த வரிசையில் நின்ற பலர் லீகுவான் குறித்தே உரையாடிக்கொண்டிருந்தனர் என நான்கு மணித்தியாலங்களாக காத்திருந்து அஞ்சலி செலுத்திய 79 வயது இவி சியாம் தெரிவித்துள்ளார். அவர் எங்களுக்கு ஆற்றிய பணியுடன் ஓப்பிடும்போது இது ஓன்றும் பெரியவிடயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் வெயிலிலும் முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், அங்கவீனர்கள் லீ குவானிற்கு அஞ்வலிசெலுத்துவதற்காக காத்திருக்கின்றனர்.
முன்னதாக உத்தியோகபூர்வ ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள இஸ்தனாலவிலிருந்து உடல் எடுத்துவரப்பட்ட வேளை பெருமளவு மக்கள் வீதிகளில் காத்திருந்து அஞ்சலிசெலுத்தியுள்ளனர்.

_81883949_81883940
மக்கள் லீகுவானிற்கு இறுதிமரியாதைசெய்வதற்கு வெளிப்படுத்திய ஆர்வம் கண்டு தாங்கள் திகைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக அஞ்சலி செலுத்துவதற்கான நேரத்தை அவாகள் அதிகரித்துள்ளனர்.