செய்திகள்

நீதிபதி பற்றாக்குறை: மோடி முன் கண்கலங்கிய தலைமை நீதிபதி

நீதிபதிகள் பற்றாக்குறையை கூறி, பிரதமர் மோடி முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்கலங்கியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தும், அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்றும், ஆனால், 15 நீதிபதிகளே உள்ளனர் என்றும் கூறிய தாக்கூர், தொடர்ந்து பேச முடியாமல் கண் கலங்கினார்.

மேலும், ஆண்டொன்றிற்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் 2600 வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், நீதித்துறையுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

N5