செய்திகள்

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு சிக்கல்

நீதிமன்ற உத்தரவையும் மீறி நேற்றைய தினம் கொழும்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்கழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்ததில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 27 பேருக்கு நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 8ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான ஹிகான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜாக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்கழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் போது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படாத வகையில் நேற்று முன்தினம் இரவு நீதி மன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதனையும் மீறி அங்கு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் அதனை நடத்தியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பந்துல குணவர்தன , டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட எம்.பிக்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது