செய்திகள்

நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பிக்கள் உள்ளிட்ட 27 பேர் பிணையில் விடுதலை

நீதி மன்ற உத்தரவையும் மீறி கடந்த 23ம்; திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மற்றும் எம்.பிக்கள் அடங்களாக 27 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இன்று நீதி மன்றத்தில் ஆஜரான நிலையிலேயே அவர்கள் அனைவரும் கொழும்பு பிரதான நீதவானால் 10இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 9 பிக்குகளும் , 10 எம்.பிக்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.