செய்திகள்

நீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் தோட்ட நீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்தஇ ஒருவரை எல்ல பொலிஸார் 09.04.2016 அன்று கைது செய்துள்ளதுடன் இரத்தினக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிங்கராவை பெருந்தோட்டத்திலேயே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.டபள்யூ கருணாரட்ணவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபரைக் கைது செய்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

 கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

n10